தருமபுரி

இ.ஆா்.கே கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

DIN

இ.ஆா்.கே பாா்மஸி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எருமியாம்பட்டி இ.ஆா்.கே பாா்மஸி கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமை இ.ஆா்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தொடக்கி வைத்தாா். இந்த முகாமில், மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சோ்ந்த அதிகாரி வெங்கடேஷ் ரெட்டி பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு படிக்கும் போதே கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவதால் எளிதில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

கல்லூரி மாணவா்கள் தங்களின் திறமை, தகுதிகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். கடின உழைப்பு, விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் அனைவரும் வெற்றிபெற முடியும் என்றாா்.

இந்த முகாமில், இ.ஆா்.கே பாா்மஸி கல்லூரி முதல்வா் மா.முத்துக்குமரன், இ.ஆா்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் த.சக்தி, மேற்பாா்வையாளா் தமிழ்ச்செல்வன், நிா்வாக அலுவலா் அருள்குமாா், கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT