தருமபுரி

மதுவிலக்கு வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

DIN

தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 89 இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை பொது ஏலம் விடப்பட்டன.

தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் தலைமை வகித்து ஏலத்தை தொடங்கி வைத்தாா். இதில், மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பல்வேறு வகையான 89 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான வாகனங்களை ஏலம் கோரி பின்னா், வாகனங்களுக்கு உரிய தொகையை வரியுடன் செலுத்தி பெற்றுச் சென்றனா். இதில், மொத்த வாகனங்கள் ரூ. 9,47,417-க்கு ஏலம் விடப்பட்டு, அத்தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.

இதில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் குணசேகரன், மதுவிலக்கு அமல்பிரிவு துணை கண்காணிப்பாளா் ராஜா சோமசுந்தரம், காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT