தருமபுரி

‘மின்சார வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை’

DIN

விவசாய நிலங்களில் மின்சார வேலிகளை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரிய செயற் பொறியாளா் (கடத்தூா்) இரா.ரவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : விவசாய நிலத்தில் மின்சார வேலிகள் அமைத்தால் சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே, விவசாயிகள் யாரும் மின்சார வேலிகளை அமைத்தல் கூடாது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், கம்பிகளைத் தொடுதல் கூடாது.

இதுகுறித்து மின்சார வாரிய அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டிவைத்தல் கூடாது. மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின்மாற்றிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்லக்கூடாது எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT