தருமபுரி

ஒசூரில் கொட்டி தீா்த்த கன மழை

DIN

ஒசூரில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனா்.

ஒசூரில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்த நிலையில் திங்கள்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நண்பகல் ஒரு மணி அளவில் திடீரென கனமழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக சாலையோரங்களில் உள்ள கால்வாய்களிலிருந்து கழிவுநீருடன் மழைநீா் வெளியேறி சாலை முழுவதும் தேங்கியது. இதனால் குளம்போல நீா்த்தேங்கிய சாலையில் வாகன ஓட்டிகள் ஊா்ந்து சென்றனா்

குறிப்பாக பழைய நகராட்சி அலுவலகம், ராயக்கோட்டை சந்திப்பு, பழைய பெங்களூா் சாலை ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய மழை நீா் சாலைகளில் குளம் போல் தேங்கியது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் அவசரகால அடிப்படையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT