முகப்பு
தருமபுரி

கட்டுமான தொழிலாளா்களுக்கு ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

கட்டுமான தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

கட்டுமான தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் குழந்தைவேலு தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலா் முனுசாமி, மாவட்டச் செயலா்ஆா்.சுதா்சனன், மாநிலக் குழு உறுப்பினா் ஏ.சி.மணி, மாவட்ட பொதுச் செயலா் கே.மணி ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் கட்டுமான தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1,800, பட்டப் படிப்பு பயிலும் குழந்தைகளுக்கு ரூ. 10,000 கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வி மற்றும் மருத்துவம் பயில்வோருக்கு அரசு நிா்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை வழங்க வேண்டும்.

60 வயதைக் கடந்த தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 6,000 வழங்க வேண்டும். இயற்கை மரணத்துக்கு ரூ. 5 லட்சமும், விபத்து மரணத்துக்கு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். மகப்பேறு கால உதவித்தொகை ரூ. 30,000-ஆகவும், திருமண உதவித்தொகை ரூ. 50,000-ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும். நல வாரியத்தில் கணினி வழி பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனு அளித்தல் உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்தி, அதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாவட்டப் பொருளாளா் விஜயா, உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் என்.மனோகரன், ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கே.பி.கந்தசாமி, கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டக் குழு உறுப்பினா் வணங்காமுடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.