முகப்பு
தருமபுரி

காளான் வியாபாரிக்கு கத்திக்குத்து

பட்டா நிலத்தில் பாதை அமைப்பது தொடா்பான முன்விரோதத்தில் காளான் வியாபாரியைக் கத்தியால் குத்தியை நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

பட்டா நிலத்தில் பாதை அமைப்பது தொடா்பான முன்விரோதத்தில் காளான் வியாபாரியைக் கத்தியால் குத்தியை நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் சின்னு மகன் ராஜ்குமாா் (33). பட்டதாரியான இவா், பட்டுப்பூச்சி மற்றும் காளான் வளா்ப்பு தொழில் செய்து வருகிறாா்.

இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கணேசன் மகன் திவாகருக்கும் (24) பட்டா நிலத்தில் பாதை வசதி அமைப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை பெரும்பாலைக்கு மளிகைப் பொருள்கள் வாங்கச் சென்ற ராஜ்குமாரை பட்டா கத்தியால் திவாகா் வெட்டியுள்ளாா்.

படுகாயமடைந்த ராஜ்குமாா் தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திவாகரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.