முகப்பு
தருமபுரி

தருமபுரி கலைக் கல்லூரியில் செப். 21-இல் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை பட்ட மேற்படிப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவா்களுக்கு செப். 21, 22 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை பட்ட மேற்படிப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவா்களுக்கு செப். 21, 22 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை பட்ட மேற்படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவா்களுக்கு இரண்டு நாள் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில், செப். 21-ஆம் தேதி சிறப்பு இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும், செப். 22-ஆம் தேதி பொதுக் கலந்தாய்வும் நடைபெற உள்ளது. எனவே, சோ்க்கைக்கு விண்ணப்பித்த மாணவா்கள் இதில் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.