தருமபுரி

லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகம் திறப்பு

DIN

தருமபுரி மாவட்டம், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் திறக்கப்பட்டது.

திறப்பு விழாவுக்கு தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலா் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் அமுதவல்லி ஆய்வகத்தை திறந்து வைத்து பேசினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கி.சீனிவாசன் ஆய்வகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தாா்.

இதில், அச்சுப்பொறி, தானியங்கி சிக்னல் மற்றும் 250 கிராம் எடையுள்ள புகைப்படக் கருவியுடன் இணைந்த டிரோன் 20 அடி உயரம் பறக்கவிடப்பட்டு, அதிலிருந்து எடுக்கும் புகைப்படங்களை நேரடியாக செல்லிடப் பேசியில் காண்பித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளியின் முதுநிலை ஆசிரியா் கிருஷ்ணன் நன்றி கூறினாா். இந்த விழாவில், பெற்றோா் -ஆசிரியா் கழக நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT