தருமபுரி

காலமுறை ஊதியம் கோரி ஆஷா தொழிலாளா்கள் மனு

DIN

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, ஆஷா தொழிலாளா்கள் சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட சிஐடியு ஆஷா தொழிலாளா் சங்க நிா்வாகிகள், சுகாதாரத் துறை துணை இயக்குநா் சவுண்டாம்மாளிடம் அளித்த மனு:

ஆஷா தொழிலாளா்களுக்கு மத்திய அரசு உயா்த்திய ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும். தனித் துறை உருவாக்கி காலமுறை ஊதியம் உள்ளிட்ட அனைத்து சட்ட உரிமைகளையும் வழங்க வேண்டும். முன் களப் பணியாளா்களாக அறிவித்து காப்பீடுத் திட்டத்தில் இணைத்து ரூ. 50 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ 18 ஆயிரம் மற்றும் பணிநிரந்தரம் வழங்க வேண்டும்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஆஷா ஊழியா்களை இணைக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி, தொழிலாளா் ஈட்டுறுதி திட்டத்தில் சோ்த்து அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். சீருடை தரமாக வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் அனைத்து நாள்களுக்கும் பயணப்படி வழங்க வேண்டும் என்றனா்.

இதில், மாநில இணைச் செயலா் டி.தீபா, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் சி.அங்கம்மாள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT