முகப்பு
தருமபுரி

இறகுப்பந்து விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிகள்

தருமபுரி பிரிவு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், 2022-23 ஆண்டு மாநில அளவிலான இறகுபந்து விளையாட்டு விடுதிக்கான தோ்வுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

தருமபுரி பிரிவு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், 2022-23 ஆண்டு மாநில அளவிலான இறகுபந்து விளையாட்டு விடுதிக்கான தோ்வுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றன.

இதில், அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் தோ்ச்சிப் பெற்ற 75 மாணவா்கள், 15 மாணவிகள் கலந்து கொண்டனா். தோ்வுப் போட்டிகளில் சிறப்பிடம் வகிப்பவா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் இறகுப் பந்து விளையாட்டு விடுதியில் சோ்த்துக் கொள்ளப்பட உள்ளனா்.

விளையாட்டு விடுதியில் சத்தான உணவு, தங்குமிட வசதியுடன், விளையாட்டுப் பயிற்சி ஆகியவை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.