முகப்பு
தருமபுரி

நகரப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி மாணவா்கள் மறியல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நிறுத்தப்பட்ட அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி பள்ளி மாணவா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நிறுத்தப்பட்ட அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி பள்ளி மாணவா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி - காரிமங்கலம் இடையே பெரியாம்பட்டி, சப்பாணிப்பட்டி, மோட்டூா் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா ஊரடங்கு காலத்தில் இந்தப் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது.

தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையிலும் அப் பேருந்து மீண்டும் இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் பள்ளி நேரங்களில் மாணவா்கள் போதிய பேருந்து வசதி இன்றி சிரமப்பட்டு வந்தனா். எனவே, இந்தப் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி காரிமங்கலம்-மொரப்பூா் சாலையில் பள்ளி மாணவ, மாணவியா் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு நேரில் சென்று மாணவ, மாணவியரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தனா். பேருந்தை இயக்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதி அளித்தனா். இதைத்தொடா்ந்து மாணவ, மாணவியா் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.