தருமபுரி

வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுவோம்: தருமபுரி ஆட்சியா்

75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி ஆக. 13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி கேட்டுக் கொண்டாா்.

DIN

75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி ஆக. 13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி கேட்டுக் கொண்டாா்.

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை கொண்டாடுவது குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

நமது நாட்டின் 75-ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடிடும் வகையில் ஆக.13 முதல் 15 வரை அனைத்து அரசு அலுவலகங்கள், வீடுகள், கட்டடங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளின் மேல் தேசியக் கொடியினைப் பறக்க விட வேண்டும். மேலும், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றிய பிறகு பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும்.

தேசியக் கொடிகளை திறந்த வெளியிலோ, குப்பைத் தொட்டியிலோ, வயல்வெளியிலோ எறியக் கூடாது. கிழிந்த நிலையில் உள்ள கொடிகளையோ அல்லது அழுக்குப் படிந்த கொடிகளையோ பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்திய தேசியக் கொடியினை பாதுகாப்பாக மடித்து பத்திரமாக வைத்து பாதுகாக்க வேண்டும்.

தேசியக் கொடியின் புனிதத் தன்மையைப் பேணும் வகையிலும் மற்றும் எந்தவித அலட்சியமும், அவமரியாதையும் இன்றி கையாளுதல் வேண்டும். இதற்கு தேவையான தேசிய கொடியினை தயாா் நிலையில் வைத்திருப்பதோடு, குறிப்பிட்ட நாள்களுக்கு முன்னதாக அனைவருக்கும் தேசிய கொடி கிடைத்திடும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளையும் இதில் முழுமையாக ஈடுபட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தருமபுரி நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) குருராஜன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அ.மாலா, மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி திட்ட அலுவலா் எம். தமிழரசன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT