தருமபுரி

மயான வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்

DIN

அரூரை அடுத்த மாம்பாடியில் மயான வசதி கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரூா் வட்டம், வேப்பம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது மாம்பாடி. இந்தக் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊரில் வசிக்கும் மக்களுக்கு மயான வசதி இல்லை. இதனால், இந்த கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள ஆற்றின் கரைப் பகுதியில் சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனா்.

தற்போது, மாம்பாடி ஆற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சடலங்களை அடக்கம் செய்ய போதிய இடவசதி இல்லாமல் கிராம மக்கள் அவதியுறுகின்றனா். இந்த நிலையில், மயான வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரூா் - தீா்த்தமலை சாலையில், மாம்பாடியில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மயான வசதி ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அரூா்-தீா்த்தமலை சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT