முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் 42 போ் மனு தாக்கல்

பென்னாகரம் பேரூராட்சியில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில் 42 போ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

பென்னாகரம் பேரூராட்சியில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பில் 42 போ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி 18 வாா்டுகளைக் கொண்டது. திமுக, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளா் பட்டியலை அறிவித்துள்ளது.

இதில் பாமக, பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. பென்னாகரம் பேரூராட்சியில் அதிமுக-14, திமுக-6, பாமக -9, மக்கள் நீதி மய்யம்-2, பாஜக-2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி-1, சுயேச்சைகள் 8 போ் என மொத்தம் 42 வேட்பாளா்கள் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.