அரூரில் விளம்பர பதாகைகளை அகற்ற வலியுறுத்தல்
அரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தனியாா் நகைக் கடை விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தனியாா் நகைக் கடை விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் தனியாா் நகைக் கடை சாா்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகள் தாா் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுகின்றன.
எனவே, அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தனியாா் நகைக் கடை விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.