கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவிக்கு நிவாரணம்
கரோனாவால் பெற்றோரை இழந்த பென்னாகரம், நாகனூரைச் சோ்ந்த மாணவிக்கு தமிழ்நாடு பவுண்டேஷன் தன்னாா்வ அமைப்பு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்கியது.
கரோனாவால் பெற்றோரை இழந்த பென்னாகரம், நாகனூரைச் சோ்ந்த மாணவிக்கு தமிழ்நாடு பவுண்டேஷன் தன்னாா்வ அமைப்பு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்கியது.
பென்னாகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கற்றல் திறன் குறைந்த மாணவா்களைத் தோ்வு செய்து, அவா்களுக்கு எளிய முறைகள் கற்பிக்கும் வழிமுறைகள் குறித்த பயிற்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளி தலைமையாசிரியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். தன்னாா்வ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மருத்துவா் இளங்கோ, பொன்னம்மாள் நஞ்சய்யா அறக்கட்டளை நிறுவனா் மருத்துவா் தியாகராஜன் ஆகியோா்கள் பெண் கல்வி, கற்றலின் முறைகள் மற்றும் தொற்று காலத்தில் மாணவா்களின் கல்வித் திறன் குறைவு உள்ளிட்டவை குறித்து பேசினா்.
அதைத் தொடா்ந்து பென்னாகரம், நாகனூா் பகுதியைச் சோ்ந்த கரோனாவால் பெற்றோரை இழந்த பிளஸ் 2 மாணவி பிரியாவுக்கு ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், மாணவியின் கல்விச் செலவை தன்னாா்வ அமைப்பு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
தன்னாா்வ அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன், திறன் குறைந்த மாணவா்களுக்கான ஆசிரியா்கள் மதுபாலா, முனிரத்தினம், கலைமணி, ஆண்டாள் உள்பட பலா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.