முகப்பு
தருமபுரி

சாலையை சீரமைக்க கோரிக்கை

அரூரில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

அரூரில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கா் நகரில் 14, 15, 16 ஆகிய வாா்டுகள் உள்ள பகுதியில் சுமாா் 2,000 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு அரூா் பேருந்து நிலையத்தில் இருந்து தீா்த்தமலை நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்புச் சாலை உள்ளது. இந்த இணைப்புச் சாலை வழியாக காா், ஆட்டோ, மினி சரக்கு வாகனம், இருசக்கர வாகனங்கள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் செல்கின்றன. இதைத் தவிர, தீா்த்தமலை, வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, பொய்யப்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த இணைப்புச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இங்குள்ள இணைப்புச் சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால் நாள்தோறும் வாகன ஓட்டிகள் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றனா்.

எனவே, அரூா் பேருந்து நிலையத்தில் இருந்து அம்பேத்கா் நகருக்கு செல்லும் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.