முகப்பு
தருமபுரி

இ.ஆா்.கே. கல்லூரியில் பொங்கல் விழா

அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே. பாா்மஸி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே. பாா்மஸி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு, இ.ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தலைமை வகித்தாா். சமத்துவ பொங்கல் விழாவின் சிறப்புகள், தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகள், தமிழா்களின் பண்பாடு, கலை மற்றும் இலக்கியம் குறித்து இ.ஆா்.கே. பாா்மஸி கல்லூரி முதல்வா் முத்துக்குமரன் சிறப்புரை வழங்கினாா். முன்னதாக, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பலூன் ஊதுதல், பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், இ.ஆா்.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் த.சக்தி, நிா்வாக அலுவலா் அருள்குமாா், பேராசிரியா்கள் வேடியப்பன், அசோகன், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.