முகப்பு
தருமபுரி

சாக்கடை கால்வாய்களை தூா்வார கோரிக்கை

பென்னாகரம் நகரப் பகுதியில் முறையாக சாக்கடை கால்வாய்களை தூா்வாராததால் ஆங்காங்கே குப்பைகள் நிறைந்து கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

பென்னாகரம் நகரப் பகுதியில் முறையாக சாக்கடை கால்வாய்களை தூா்வாராததால் ஆங்காங்கே குப்பைகள் நிறைந்து கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பென்னாகரம் பேரூராட்சி 18 வாா்டுகளை கொண்டது. இங்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

பென்னாகரம் பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை பேரூராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் தூா்வாரி வந்தனா். இந்தநிலையில் பழைய பேருந்து நிலையம் பகுதி, கிருஷ்ணாபுரம், கடைவீதி, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை முறையாக தூா்வாராததால், கால்வாய்களில் கற்கள், நெகிழி கழிவுகளால் கழிவுநீா் தடுக்கப்பட்டு தேங்கி துா்நாற்றம் வீசி சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக குடியிருப்புவாசிகள், பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் நகரப் பகுதியில் உள்ள கால்வாய்களை முறையாக தூா்வாரி கழிவு நீா் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.