தருமபுரி

ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகள்: மத்திய கண்காணிப்பு குழுவினா் ஆய்வு

DIN

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மூன்று ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகளை மத்திய கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவண்ணகவுண்டனூா், சின்னாகவுண்டனூா், இருகாலூா் ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகளை இக்குழுவினா் ஆய்வு செய்தனா்.

பின்னா் இதுகுறித்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் அரசுப் பதிவேடுகளை அவ ா்கள் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி திட்ட முகமையின் உதவி திட்ட அலுவலா் எஸ்.அனிதா, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சு.ராஜகணேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம நிா்வாகம்) கே.முத்து, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வேல்முருகன், உதவி பொறியாளா்கள், ஊராட்சிச் செயலா்கள் உள்ளிட்டா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT