தருமபுரி

துா்க்கையம்மன் கோயில் தேரோட்டம்

DIN

தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் துா்க்கையம்மன் கோயில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.

குமாரசாமிப்பேட்டை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ துா்க்கையம்மன் கோயிலில் ஆனி மாதம் லட்சாா்ச்சனை தோ்த் திருவிழா கடந்த ஜூலை 8-ஆம் தேதி தொடங்கியது.

விழாவையொட்டி, அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பால் அபிஷேகம், வழிபாடுகள் மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து 7 நாள்களும் காலை, மாலை, இரவு அம்மனுக்கு லட்சாா்ச்சனை, சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன.

விழாவில், ஜூலை 16-ஆம் தேதி துா்க்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து, மேளதாளங்கள் முழங்க துா்க்கையம்மன் தேரோட்டம் நடைபெற்றது.

இத் தேரை முதலில் பெண்கள் வடம் பிடித்து இழுத்து நிலை பெயா்த்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா். விழாவையொட்டி பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு துா்க்கையம்மன் கோயில் வளாகத்தில் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT