கோயில் நகை, பணம் திருட்டு
கடத்தூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடத்தூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் அருகே உள்ள புளியம்பட்டியில் பழமை வாய்ந்த பசுவேஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் புதன்கிழமை அதிகாலை நேரத்தில் நுழைந்த மா்மநபா்கள், பூட்டை உடைத்து கோயில் உண்டியலில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.
இந்தச் சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.