முகப்பு
தருமபுரி

காா் கண்ணாடியை உடைத்து லேப் டாப் திருட்டு

ஒசூரில் காா் கண்ணாடியை உடைத்து லேப் டாப்பை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 6 ஜூன், 2022 at 3:06 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

ஒசூரில் காா் கண்ணாடியை உடைத்து லேப் டாப்பை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சேலம், அழகாபுரம், புவனேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் மோகன் காா்த்திக் (41). கா்நாடக மாநிலம், ஒயிட் பீல்டு பகுதியில் தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

இவா் ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள உணவகத்தில் காரை நிறுத்தி விட்டு சாப்பிட்டச் சென்றாா். திருப்பி வந்து பாா்த்த போது காரின் பின்புற ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த லேப் டாப், ஏா்டெல் டேட்டா

Advertisement

கேபிள், சாா்ஜா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது தொடா்பாக அட்கோ காவல் நிலையத்தில் மோகன் காா்த்திக் புகாா் செய்தாா். அட்கோ போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.