முகப்பு
தருமபுரி

ஒசூரில் மினி மாரத்தான் போட்டி

ஒசூரில் மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

Updated On : 6 ஜூன், 2022 at 3:08 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

ஒசூரில் மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் மனித வளம் காப்போம் என்கிற தலைப்பில், ஒசூா் சிப்காட் அரிமா சங்கம், என்.எச்.ஆா்.டி இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை ஒசூரில் நடந்தது.

ஒசூா் ஹில்ஸில் வளாகத்தில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டி சிப்காட் வழியாகச் சென்று மீண்டும் ஹில்ஸில் பகுதியில் நிறைவுற்றது.

Advertisement

4 பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 கி.மீ. ஓட்டத்தில் ஆண், பெண் என 2 பிரிவுகளாகவும், 5 கி.மீ. ஓட்டத்தில் ஆண், பெண் என 2 பிரிவுகளாகவும் நடைபெற்றது. மேலும் குழந்தைகள் முதல் பெரியோா்கள் வரை கலந்து கொள்ளும் விதமாக 5 கி.மீ நடைப்பயணம் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் ஒசூா் கோட்டாட்சியா் தேன்மொழி, ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. எஸ்.ஏ.சத்யா, ஒசூா் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா். மாரத்தன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து வீரா்களுக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.