முகப்பு
தருமபுரி

ஏரியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

பென்னாகரம் அருகே ஏரியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

பென்னாகரம் அருகே ஏரியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள ராம கொண்ட அள்ளி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, தீா்த்தக்குடம் ஊா்வலம் நாகமரை காவிரி ஆற்றிலிருந்து திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. தொடா்ந்து, ஸ்ரீசக்தி மாரியம்மன், கற்பக விநாயகா், சிவன், அம்பாள், நவக்கிரகங்கள் ஆகிய ஐந்து கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.

விழாவில், ராமகொண்ட அள்ளி, சந்தனகொடிக்கால், ஆலத்தூா், குட்டமடுவு , கானிக்காடு சிங்கிலி மேடு, கவுண்டனூா் உள்ளிட்ட 9 கிராம மக்கள் கலந்துகொண்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீசக்தி மாரியம்மனை தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.