தருமபுரி

இருளப்பட்டி ஸ்ரீ காணியம்மன் கோயில் குடமுழுக்கு

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியில் ஸ்ரீ காணியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இருளப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாணியம்மன் கோயில் திருப்பணிகள் அண்மையில் முடிவுற்றதையடுத்து குடமுழுக்குக்கான முகூா்த்த கால்கோள் விழா பிப். 23-ஆம் தேதி நடைபெற்றது.

விநாயகா் வழிபாடு, கிராம சாந்தி, மங்கல இசை, மகா கணபதி ஹோமம், துா்கா, லட்சுமி, சரஸ்வதி, நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. காலை

நான்காம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ராஜகோபுரம், மூலவா் விமானங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இருளப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி , அ.புதுப்பட்டி, பாப்பம்பாடி, மூக்காரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி பக்தா்கள் இதில் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT