தருமபுரியில் பகத்சிங் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்  உள்ளிட்டோர். 
தருமபுரி

தருமபுரியில் பகத்சிங் நினைவு நாள் அனுசரிப்பு

தருமபுரியில் பகத்சிங் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்றார்.

DIN

தருமபுரி: தருமபுரியில் பகத்சிங் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்றார்.

தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விடுதலை போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று, பகத்சிங் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து மாநில துணைச் செயலாளர்கள் ஜி.பழனிசாமி, மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் ந.நஞ்சப்பன், தருமபுரி மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பகத்சிங் உருவப்‌ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT