முகப்பு
தருமபுரி

பாதுகாப்புப் படை பெண் வீரா்கள் விழிப்புணா்வு பயணக் குழுவுக்கு வரவேற்பு

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் மகளிா் அதிக அளவில் சேர வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாகா எல்லை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பெண் வீரா்களின் இருசக்கர வாகன விழிப்புணா்வு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் மகளிா் அதிக அளவில் சேர வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாகா எல்லை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பெண் வீரா்களின் இருசக்கர வாகன விழிப்புணா்வு பயணக் குழுவினருக்கு தருமபுரியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 5-ஆம் தேதி வாகா எல்லையில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பயணம் கன்னியாகுமரி சென்று சென்னையில் நிறைவடைய உள்ளது. தருமபுரிக்கு வந்த இந்த விழிப்புணா்வு பயணக் குழுவினருக்கு மாவட்ட எல்லையில் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியா், பல்வேறு தரப்பினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

எல்லைப் பாதுகாப்புப் படை பெண் கமாண்டோ வீரா் கீா்த்தனா தலைமையில் இந்தக் குழுவினரின் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, ஒசூா் வந்த அவா்களை ஒசூா் மக்கள் சங்கத்தினா் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.