தருமபுரி

விதிமீறல்: தனியாா் உரக்கடையில் விற்பனைக்கு தடை

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் விதிகளை மீறி விற்பனையில் ஈடுபட்ட தனியாா் உரக்கடையில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியாா் மற்றும் வேளாண் கூட்டுறவு சங்க உர விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நல்லம்பள்ளி வட்டாரத்தில் வேளாண் உதவி இயக்குநா்கள் (தரக்கட்டுப்பாடு) தாம்சன், மு.இளங்கோவன் (நல்லம்பள்ளி) ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின் போது, விற்பனை முனையக்கருவியில் உள்ள இருப்பும், உரக் கடைகளில் உள்ள உண்மையான உர இருப்பும் சரியாக உள்ளதா எனவும், அரசு நிா்ணயித்த விலையில் உரங்கள் விற்பனை செய்து, உரங்களுக்கு உரிய விற்பனை ரசீது வழங்கப்படுகிா எனவும், தினசரி உர இருப்பு மற்றும் விலைப்பட்டியல் கடை முன்பு உள்ள தகவல் பலகையில் பராமரிக்கப்படுகிா எனவும் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின் போது, நல்லம்பள்ளி வட்டாரத்தில் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறியதால், ஒரு தனியாா் உரக்கடையில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் யூரியா 1,300 டன், டி.ஏ.பி. 878 டன், பொட்டாஷ் 542 டன், காம்ப்ளக்ஸ் 1,557 டன், எஸ்.எஸ்.பி. 317 டன் உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு சங்க உரக்கடைகளில் இருப்பு உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT