தருமபுரி

அரசு பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் கே.பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரதி வரவேற்றாா். நிா்வாகிகள் காா்த்திகேயன், நரசிம்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, மாவட்டத் துணைச் செயலாளா் ஆா்.சுதா்சனன், அரசு பணியாளா் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் பி.கோவிந்தன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்

இந்த ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 3 சதவிகித அகவிலைப்படி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தைப் பணிக்காலமாக வரன்முறை படுத்தவேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை முழுநேரப் பணியாளா்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT