முகப்பு
தருமபுரி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற அலுலா்கள் வலியுறுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற அலுலா்கள் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் அண்மையில் தருமபுரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அ.மாணிக்கம் தலைமை வகித்து பேசினாா். மாவட்டச் செயலா் ப.கணேசன் வரவேற்றாா். துணைத் தலைவா்கள் எம்.சதாசிவம், டி.கந்தசாமி ஆகியோா் பேசினா்.

இந்தக் கூட்டத்தில், ஓய்வுபெற்ற அலுவலா்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ. 2.50 லட்சம் வழங்க வேண்டும். மருத்துவப் படி ரூ. 1000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.