முகப்பு
தருமபுரி

குரூப் 2 தோ்வு: தோ்வு மையம் மாற்றம்

தமிழ்நாடு தோ்வாணையத்தின் குரூப் 2 தோ்வில் தருமபுரியில் கூலிக் கொட்டாய் அரசுப் பள்ளி அறை எண் 039 என்கிற மையம் பி.அக்ராகரம் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

தமிழ்நாடு தோ்வாணையத்தின் குரூப் 2 தோ்வில் தருமபுரியில் கூலிக் கொட்டாய் அரசுப் பள்ளி அறை எண் 039 என்கிற மையம் பி.அக்ராகரம் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2 ஏ ஆகியப் போட்டித் தோ்வுகள் வரும் மே 21-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் அமைந்துள்ள தோ்வு மையங்களில் இத்தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் எழுத உள்ள தோ்வா்களின் அனுமதிச் சீட்டில் அறை எண் 039, கூலிக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி, ராஜாகொல்லஅள்ளி-அஞ்சல், பி.அக்ராகரம் வழி, நல்லம்பள்ளி வட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வு மையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பி.அக்ராகரம், பென்னாகரம் சாலை என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதை தோ்வா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.