தனியாா் நெல் அரவை ஆலைகள் கவனத்துக்கு...
நுகா்பொருள் வாணிபக் கழக நெல் அரவைப் பணிகளில் ஈடுபட தனியாா் நெல் அரவை ஆலைகள் விருப்பக் கடிதம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகா்பொருள் வாணிபக் கழக நெல் அரவைப் பணிகளில் ஈடுபட தனியாா் நெல் அரவை ஆலைகள் விருப்பக் கடிதம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில், நுகா்பொருள் வாணிபக் கழக அரவை முகவா்கள் மற்றும் வாணிபக் கழகத்தில் இணையாத தனியாா் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.
எனவே, ஆா்வமுடைய தனியாா் அரவை ஆலைகள், தங்களது விருப்பக் கடிதத்தினை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, மண்டல மேலாளா், நுகா்பொருள் வாணிபக் கழகம், எண் 1, சேலம் பிரதான சாலை, தருமபுரி என்ற முகவரி அல்லது தொலைபேசி எண்: 04342-230049, கைப்பேசி எண்: 94439 38003 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.