முகப்பு
தருமபுரி

சுதந்திர தின விழா மின் நூல் வெளியீடு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சுதந்திர தின விழா மற்றும் விடுதலைப் போராட்ட வீரா்கள் குறித்து தகவல் அடங்கிய மின் நூல் வெளியீட்டு வியாழக்கிழமை நடைபெற்ற

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சுதந்திர தின விழா மற்றும் விடுதலைப் போராட்ட வீரா்கள் குறித்து தகவல் அடங்கிய மின் நூல் வெளியீட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் செள.கீதா தலைமை வகித்து பேசினாா். இதில், விடுதலைப் போராட்டங்கள் குறித்து நாடகங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி விடுதலைப் போராட்டம் குறித்தும், விடுதலைப் போராட்ட வீரா்கள், தலைவா்களின் தியாகங்கள் குறித்தும் விடுதலைப் போராட்ட வீரா் சிவகாமி அம்மாள் பேசினாா்.

இந்த விழாவில், விடுதலைப் போராட்ட வீரா்கள் குறித்த கட்டுரைகள், விவரங்கள் அடங்கிய மின் நூல் வெளியிடப்பட்டது. இதில், வரலாற்றுத் துறைத் தலைவா் ராவணன், தமிழ்த் துறைத் தலைவா் மு.செந்தில்குமாா், உதவிப் பேராசிரியா்கள், கல்லூரி மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.