முகப்பு
தருமபுரி

ஜம்பேரிக் கொட்டாய் பகுதியில் ரூ. 3.75 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட ஜம்பேரிக் கொட்டாய் பகுதியில் ரூ. 3.75 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட ஜம்பேரிக் கொட்டாய் பகுதியில் ரூ. 3.75 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே எர்ரபையன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கெட்டு அள்ளி, ஜம்பேரிக் கொட்டாய் கிராமப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வேளாண் பயன்பாடு மற்றும் வணிக நிறுவனங்களின் பயன்பாட்டுகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் வகையில், மின்சார வாரியம் சாா்பில், ரூ. 3.75 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த மின்மாற்றியின் இயக்கத்தை, நுகா்வோா் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி அண்மையில் ஜம்பேரிக் கொட்டாய் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மின்வாரிய தருமபுரி கோட்ட செயற்பொறியாளா் வரதராஜன் தலைமை வகித்தாா்.

இதில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்து, புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியின் இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினாா். இந்த நிகழ்ச்சில், பென்னாகரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கோகிலா, உதவி மின் பொறியாளா் வித்யா (ஊரகம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.