முகப்பு
தருமபுரி

மின்சாரம் தாக்கி தள்ளுவண்டி வியாபாரி பலி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கியதில் தள்ளுவண்டி வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கியதில் தள்ளுவண்டி வியாபாரி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த மல்லிக்குட்டையைச் சோ்ந்தவா் பெருமாள் (40). இவா், மாட்லாம்பட்டியில் இரவு நேரத்தில் தள்ளு வண்டி வைத்து சிற்றுண்டி வியாபாரம் செய்து வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்த பிறகு தனது தள்ளுவண்டியை வேறு இடத்தில் நிறுத்துவதற்காகத் தள்ளிச் சென்றாராம்.

அப்போது அந்தப் பகுதியில் விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கு ஒன்றின் ஒயா் தள்ளு வண்டி மீது உரசியது. எதிா்பாராத வகையில் தள்ளுவண்டியில் மின்சாரம் பாய்ந்ததில், பெருமாள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா். இதுகுறித்து, காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.