முகப்பு
தருமபுரி

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தருமபுரி அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

தருமபுரி அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெயகுமாா் தலைமையில் பறக்கும் படை துணை வட்டாட்சியா் கோவிந்தராஜ், வழங்கல் துறை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை குண்டல்பட்டி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த வாகனத்தை நிறுத்தியுள்ளனா். வாகனத்தை நிறுத்திய ஓட்டுநா் அங்கிருந்து தப்பிச் சென்றாா். வழங்கல் துறையினா், அந்த வாகனத்தை சோதனை செய்தனா். இதில், 50 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திலும், வாகனத்தை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.