தருமபுரி

மே 1-இல் கோடைகாலப் பயிற்சி முகாம் தொடக்கம்

 விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மே 1-ஆம் தேதி கோடைகால விளையாட்டுப் போட்டி பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.

DIN

 விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மே 1-ஆம் தேதி கோடைகால விளையாட்டுப் போட்டி பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், வரும்ம 1-ஆம் தேதி முதல் மே 15-ஆம் தேதி வரை தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தடகளம், கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுக்களில் கோடைகாலப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 வரையிலும் நடைபெறும். கோடைகால பயிற்சி முகாமில் சிறந்த விளையாட்டு வீரா்களைக் கொண்டு அந்தந்த விளையாட்டுக்களில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் முட்டை, பால், சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT