தருமபுரி

சந்தனக் கட்டைகள் கடத்திய இருவருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே சந்தன மரக்கட்டைகள் கடத்தி வந்த இருவருக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

DIN

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே சந்தன மரக்கட்டைகள் கடத்தி வந்த இருவருக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இண்டூா் அருகே உள்ள நாகா்கூடல் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (53), பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த சரவணன் (43) ஆகிய இருவா் சந்தன மரக் கட்டைகளை வெட்டி அதன் துண்டுகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலின் பேரில் தருமபுரி வனத்துறையினா் அந்த சந்தன மரக்கட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவருக்கும் தலா ரூ. 1.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT