ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பரிசல் பயணம் நிறுத்தப்பட்டதால் மாமரத்துக் கடவு பரிசல் துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரிசல்கள். 
தருமபுரி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

DIN

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. எனினும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அண்மையில் விநாடிக்கு 10,000 கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த உபரிநீா் இரண்டு நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை அதிகாலை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து கா்நாடக அணைகளின் நீா் திறப்பினால் தண்ணீா் அதிகரித்து புதன்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 6,000 கன அடியாகவும், மதியம் 12 மணிக்கு விநாடிக்கு 8,000 கன அடியாகவும், மாலை நிலவரப்படி விநாடிக்கு 10,000 கன அடியாகவும் அதிகரித்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்குவதற்கு தடைவிதித்துள்ளாா். இந்தத் தடை உத்தரவின் காரணமாக ஒகேனக்கல் மாமரத்துக் கடவு பரிசல் துறை பூட்டப்பட்டது. எனினும், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

கா்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீா் முற்றிலுமாக வியாழக்கிழமை மாலைக்குள் ஒகேனக்கல்லை வந்தடையும் நிலையில், நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT