தருமபுரி மாவட்டத்தில், ஜன. 16 மற்றும் ஜன. 26 ஆகிய இரண்டு நாள்கள் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் திருவள்ளுவா் தினமான ஜன. 16 அன்றும், குடியரசு தின விழா நடைபெறும் ஜன. 26-அன்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற தனியாா் ஓட்டல்களின் மதுக் கூடங்கள், முன்னாள் படைவீரா் மதுவிற்பனைக் கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூட உத்தரவிடப்படுகிறது. இதனை மீறி எவரேனும் செயல்பட்டாலோ, அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.