தருமபுரி

70 வயது நிரம்பியவா்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

70 வயது நிரம்பிய முதியவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அரசு அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

DIN

70 வயது நிரம்பிய முதியவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அரசு அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் ஓய்வுபெற்ற அலுவலா் சங்க தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ.மாணிக்கம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.கந்தசாமி வரவேற்றாா். பொருளாளா் பெ.ஜெயபால் வரவு-செலவு அறிக்கையைச் சமா்ப்பித்தாா்.

இக் கூட்டத்தில், 4 சதவீத அகவிலைப்படியை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அறிவித்து வழங்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது 70 வயது நிரம்பிய ஓய்வுபெற்ற அரசு அலுவலா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

SCROLL FOR NEXT