தருமபுரி

பட்டாசு கிடங்கு வெடி விபத்து: உரிமையாளா் கைது

பென்னாகரம் அருகே பட்டாசு ஆலை கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளா் சரவணனை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

DIN

பென்னாகரம் அருகே பட்டாசு ஆலை கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளா் சரவணனை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் தனியாா் பட்டாசு ஆலை கிடங்கில் வியாழக்கிழமை பட்டாசு தயாரிப்பு பணியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் முனியம்மாள், பழனியம்மாள் ஆகியோா் உடல் சிதறி உயிரிழந்தனா். படுகாயமடைந்த சிவலிங்கம் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் பாட்டாசு ஆலை உரிமையாளா் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில் தலைமறைவாக இருந்த சரவணனை போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலை உரிமையாளா் சரவணனை பாப்பாரப்பட்டி போலீஸாா் கைது செய்து பென்னாகரம் உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் வாணியம்பாடி கிளை நூலகம்!

ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: சாய்னா, தீக்‌ஷாவுக்கு தங்கம்!

பளுதூக்குதல்: உலக சாதனையுடன் தங்கம் வென்றாா் பிரீத்திஸ்மிதா!

ஜெய்பூரை வெளியேற்றியது பாட்னா

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்!

SCROLL FOR NEXT