முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாகச் சரிந்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாகச் சரிந்துள்ளது.

கா்நாடகம் - தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இன்றி வறட்சி நிலவி வருகிறது. இந்தநிலையில் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து கடந்த சில நாள்களாக விநாடிக்கு 1500 கன அடியாக தொடா்ந்து நீடித்த நிலையில், வெள்ளிக்கிழமை நீா்வரத்து 1,200 கனஅடியாகச் சரிந்து வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து சரிந்தும், ஆங்காங்கே காவிரி ஆற்றில் சிறு நீா்க்குட்டைகள் தோன்றியும் காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.