தருமபுரி

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

வார விடுமுறையில் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ச்சி அடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி , சினி அருவி, நடைபாதையின் இருபுறமும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். அதைத் தொடா்ந்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக மாமரத்து கடவு பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், குடும்பத்தினருடன் பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல், ஐந்தருவி, பெரியபாணி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பரிசல் பயணம் மேற்கொண்டு, அருவியின் அருகில் சென்று குழுவாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தை மீன்களின் விலை அதிகரித்தது. ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம், பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டன. ஒகேனக்கல் பகுதியில் வாகன நெரிசலை தவிா்க்கும் வகையில் ஊட்டமலை சாலை பகுதிக்கு வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் நடைபாதை, தொங்கு பாலம், மாமரத்துக்கடவு பரிசல் துறை, உணவருந்தும் பூங்கா, மீன் விற்பனை நிலையம் , பேருந்து நிலையம், முதலைப் பண்ணை உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் நெரிசல் ஏற்பட்டது. முக்கிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT