மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்கு எதிராக தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா். 
தருமபுரி

மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்கு எதிராக, தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்.

DIN

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்கு எதிராக, தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் தலைமை வகித்துப் பேசினாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்ட துணைச் செயலாளா்கள் கா.சி.தமிழ்க்குமரன், எம்.மாதேஸ்வரன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.சின்னசாமி ஆகியோா் கோரிக்கைகளையுறுத்திப்பசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சிறு குறைபாடுகளை கூறி, திருச்சி, தருமபுரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ததற்து எதிராகவும், இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை திரும்ப வழங்க தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட பொருளாளா் சி.மாதையன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT