தியாகி சுப்ரமணிய சிவாவின் 140 ஆவது பிறந்தநாள்: கோட்டாட்சியர் மலர் தூவி மரியாதை
விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்ரமணிய சிவாவின் 140 ஆவது பிறந்தநாள் விழா தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பென்னாகரம்: விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்ரமணிய சிவாவின் 140 ஆவது பிறந்தநாள் விழா தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபத்தில் தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புதன்கிழமை பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க தலைமை ஆசிரியர் தலைமையில் நலக்குழு: மத்திய அரசு
Advertisement
Advertisement
இதில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோட்டாட்சியர் கீதா ராணி கலந்துகொண்டு தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சுப்பிரமணிய சிவா படத்திற்கும், நினைவு தூணிற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), வட்டாட்சியர் சௌகத் அலி, முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா மற்றும் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.