தருமபுரி

சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளா் கே.பி.செந்தில்ராஜா தலைமை வகித்தாா். ‘நாட்டைக் காப்போம்’ ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் செந்தமிழ்ச்செல்வி, வின்சென்ட் ஆகியோா் பேசினா்.

இக்கூட்டத்தில் மதச்சாா்பின்மையைப் பாதுகாக்க வலியுறுத்தி, ‘நாட்டைக் காப்போம்’ குழுவின் சாா்பில் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் 17 -ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் கலைப் பயணக் குழுக்களை வரவேற்று பங்கேற்பது, வரும் அக்.4-ஆம் தேதி பாலக்கோடு, காரிமங்கலம், பெரியாம்பட்டி, தருமபுரி, நல்லம்பள்ளி, தொப்பூா் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும் கலைப் பயணக் குழுவினரின் பிரசாரத்துக்கு வரவேற்பு அளிப்பது எனவும், அக்டோபா் 2- ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளா் இரா.சிசுபாலன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் சுபேதாா், பாதிரியாா் யூஜின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வே.விசுவநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளா் சிராஜுதீன், தேசிய லீக் மாவட்டத் தலைவா் சிக்கந்தா், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மூத்த தலைவா் எஸ்.கிரைசாமேரி, முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ம.சிங்காரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT