தருமபுரி

காரிமங்கலத்தில் திமுக கொடியேற்றினாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு திமுக கொடியை ஏற்றி வைத்தாா்.

DIN


தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு திமுக கொடியை ஏற்றி வைத்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்துக்கு வருகை தந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க

வருகைத் தந்த அவருக்கு மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் திமுகவினா் திரண்டு வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து காரிமங்கலம் - மொரப்பூா் சாலையில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று 60 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்டச் செயலாளா்கள் பி.பழனியப்பன் (மேற்கு) , தடங்கம் பெ.சுப்ரமணி (கிழக்கு), இளைஞரணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT