தருமபுரி

மின் கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN


அரூா்: சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறையின் அரூா் கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் விவரம் :

மொரப்பூா் வழியாகச் செல்லும் அரூா் - தருமபுரி நெடுஞ்சாலையானது நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. இந்த சாலை விரிவாக்கப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடையும் நிலையுள்ளது. இந்த நிலையில், எச்.அக்ராஹரம் கூட்டுச்சாலையில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பங்கள் உள்ளன. இங்குள்ள மின் கம்பங்களை இடமாற்றம் செய்யாமல் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. சாலையோரம் ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் இருப்பதால் விபத்துகள் நேரிடும். எனவே, எச்.அக்ராஹரம் கூட்டுச்சாலையில் இடையூறாக உள்ள மின் கம்பங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT